உடனடியாக பதிவு செய்யவும்! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகம் மூலம் உடனடியாக பதிவு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தரமான உணவை வழங்கும் நோக்கம்
மேலும், தானசாலை ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்வதற்கு முன்னர், தங்கள் பகுதியிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார ஆய்வாளரைச் சந்தித்து, தேவையான சுகாதார ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் தரமான உணவை வழங்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,தானசாலைகளை ஏற்பாடு செய்வதற்கான விஷேட வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri