மட்டக்களப்பில் பிரதேசவாதம் தேசியமக்கள் கச்தியால் தோற்கடிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மொழி வேறுபாடுகளை கலைந்து தேசிய மக்கள் சக்தி பிரதேச வாதத்தையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் தோற்கடித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த கால தேர்தலிலே இந்த மாவட்டத்தை கைப்பற்றி கொண்டதாக தெரிவித்து கொண்டவர்கள் இன்று மக்களுக்குள்ளே ஒழிந்து மக்களை தேடிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் ஆட்சி
காலி முகத்திடலில் நாங்கள் ஒன்று கூடும்போது எதிர்கட்சியின் எங்களை கேலி செய்து கொண்டிருந்தனர்.ஆனால் இன்று 21 மாவட்டங்களிலும் அலை கடல் போல மக்கள் திரண்டு இந்த மக்கள் ஆட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என எதிர்கட்சிகளுக்கு நிரூபித்து காட்டியுள்ளனர்.

கடந்த கால தேர்தலிலே இந்த மாவட்டத்தை கைப்பற்றி கொண்டதாக தெரிவித்து கொண்டவர்கள் இன்று மக்களுக்குள்ளே ஒழிந்து மக்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இன்று எமது தோழர்கள் இனமொழி வேறுபாடுகளை கலைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச வாதத்தை மற்றும் மேட்டுக்குடி வர்கத்தின் ஆதிக்கத்தை தேற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்துள்ளோம்.
அபிவிருத்தி
மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கொள்வதாக கடந்த காலங்களில் பல ஊழல்களையும், போலி விமர்சனங்களையும் பரப்பி கொண்டவர்கள் இன்று வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
ஆட்சியை பெறுப்பேற்றதும் அனைத்து மாவட்டங்களிலும் அபிவிருத்தியை செய்து வருகின்றோம் அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.