சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதி
மாத்தளை - உக்குவளை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமி, சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
வீட்டில் பெரியவர்கள் எவருமில்லாத நேரத்தில் அங்கு சென்றுள்ள சந்தேக நபர், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து உக்குவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam