உரங்களின் விலைகள் குறைப்பு
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை இன்று (17) முதல் குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
உரங்களின் விலைகள்
இதன்படி, 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் APM உரம் 7200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் YPM உரம் 6200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
9750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(யூரியா) உரம் 7950 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(SA) உரம் 6200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
11000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் TDM உரம் 9200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |