செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: இலங்கையில் கொட்டும் டொலர்
செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதனால் இலங்கைக்கு நன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை போக்குவரத்து இடமாக பயன்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வழமைக்கு மாறாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
சூயஸ் கால்வாய்
செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சூயஸ் கால்வாய் வழியாக வந்த கப்பல்கள் தற்போது தென்னாப்பிரிக்கா கண்டம் வழியாக வருகின்றன.
கொழும்பு துறைமுகத்தின் மூலோபாய இருப்பிடம் காரணமாக, துறைமுகத்தை கடக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு எளிதில் அணுகக்கூடியவையாகும்.
தென்னாப்பிரிக்கா வழியாக செல்லும் கப்பல்களுக்கான முதல் துறைமுகம் கொழும்பு துறைமுகமாகும். அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் இந்தியா செல்லும் பெரும்பாலான கப்பல்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைகின்றன.
அதிக டொலர்கள்
மீள் ஏற்றுமதி இதுவரை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் நடவடிக்கை லால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டுக்கு அதிக டொலர்கள் கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |