இந்தியாவில் அதிகரிக்கும் பதற்றம்.. மோடி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
டெல்லி குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், விசாரணை அமைப்புக்கள் வழக்கின் இறுதிக்கட்டத்தை அடையும் என நம்பப்படுவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடும் எச்சரிக்கை
நேற்று, மாலை வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் காரில் இருந்தவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த வைத்தியர் உமர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், குறித்த நபரின் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்ததுடன் இருவர் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தீவிர கண்காணிப்பு
குறித்த கூட்டத்தில் அவர், "அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் அனைத்து விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

மேலும், தலைநகரம் டெல்லி மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது, விமான நிலையங்கள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, இந்திய பிரதமர் மோடி, வெடிப்பு சம்வத்துக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam