டெல்லியை கதி கலங்க வைத்த சம்பவம்! இலக்கு வைக்கப்படும் இப்ராஹிம் - பிரான்ஸ் ரூபன்
டெல்லி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவமானது பயங்கரவாத தாக்குதல் என இந்திய மத்திய உள்துறை அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் மூன்று வைத்தியர்கள் அடங்கலாக எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்கின்ற நிலையில் நேற்றையதினம் டெல்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு நிகராக இன்றையதினம் பாகிஸ்தான் இஸ்லாமபாத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கடந்தவாரம் இந்திய உளவு அமைப்பானது தாவூத் இப்ராஹிம் என்ற பயங்கரவாதி தென்னிந்தியா ஊடாக போதைப்பொருள் கடத்தல்களுக்கு இலங்கையர்களுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்திருந்தது.
தாவூத் இப்ராஹிமின் கும்பலுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களான பிரான்ஸ் ரூபன் மற்றும் பட்டுவத்த சாமர ஆகியோர் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதை புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி இந்தியப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இவை உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam