கோட்டா கோ கம'விலிருந்து காலி செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முகாம்
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கிணங்க, ஜூலை 21 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை காலி செய்ததாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்த முதலுதவி முகாமை காலி செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஜீலை 19 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, நீதிக்கு கட்டுப்படும் நிறுவனம் என்ற வகையில், ஜூலை 21 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாம் காலி செய்யப்பட்டது.
முதலுதவி முகாமின் நிறுவல்
காலி முகத்திடலில் மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து ஏப்ரல் 9 ஆம் திகதி தற்காலிகமாக செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி முகாம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மக்களுக்கு முதலுதவி வழங்குவதற்காக சங்கம் நிரந்தர முகாம் ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி நிறுவியிருந்தது” எனவும் தெரிவித்துள்ளது.



