சுகாதார செயலாளருக்கு தாதியர் சங்கத்தினால் சிவப்பு எச்சரிக்கை
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் சுகாதார செயலாளருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொது வைத்திய தாதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விடயங்கள் 2021-06-30 திகதிக்குள் நடைமுறைப்படுத்தப்படாவிடின் எதிர்வரும் 2021 ஏழாம் மாதம் முதலாம் திகதி மற்றும் இரண்டாம் திகதிகளில் தாதியர்களினால் சுகயீன விடுமுறை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வைத்திய தாதியர்கள் சங்கத்தின் நிர்வாகசபை கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பொது வைத்திய தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இதேவேளை இவ் விடயம் தொடர்பாக பிரதம செயலாளர் மற்றும் சுகாதார செயலாளருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
