129 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை!
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 129 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளில் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாயில் இருப்பதாகவும் சிலர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
தப்பியோடியவர்களில் 40 பேர் இலங்கையில் நிதிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதாள உலக குழுவின் உறுப்பினரும், போதைப்பொருள் வர்த்தகருமான “கிம்புலா எல குணாவை” இந்தியாவில் இருந்து நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கிம்புலா எல குணா அண்மையில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam