விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ள நிலையில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ஆம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அது தம்மால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர்
இது குறித்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தொிவிக்கையில், பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக துப்புரவு செய்ய முயற்சித்தால் பொலிஸ், இராணுவம் என பிரச்சினைகள் வரும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நகரசபை தொடர்ச்சியாக அந்த வளாகத்தை துப்புரவு செய்யும், எவரேனும் அதற்கு உரிமை கோரினால் பராமரிப்பு செலவுடன் மீள வழங்கப்படும் என்றார்.

எம்.கே.சிவாஜிலிங்கம்
இந்த விடயம் குறித்து எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், வல்வெட்டித்துறையில் எத்தனை இடங்களில் பற்றைகளாக காட்சியளிக்கின்றன. அனைத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை ஒட்டியுள்ளார்களா? அந்த காணியை நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - தீபன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam