பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் பிப்ரவரி 20, முதல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பங்களுக்கான கடைசி திகதி மார்ச் 05, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய விண்ணப்பங்கள்
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தில் ““Our Services” ” என்பதன் கீழ் “இணைய விண்ணப்பங்கள் - ஆட்சேர்ப்புத் தேர்வுகள்/ E.B. தேர்வுகள்” என்பதன் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.