சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்! அவசர உதவி வழங்கிய பொலிஸார்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக அறிவித்து கிளிநொச்சியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்
இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அவருக்கு அவசர உதவி வழங்கிய பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடும் குழப்ப நிலை
இதேவேளை, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி நகரை அண்மித்துள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்று வரும் போது ஏ9 வீதியில் சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய ஒரு சாராருக்கும், போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் குழப்ப நிலை தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam