கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி! (VIDEO)
கிளிநொச்சி - அம்பாள்நகர் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாள்நகர் பகுதியினை சேர்ந்த டசிந்தன் சன்சிகா என்ற 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி காணாமல்போன நிலையில்,உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தேடிய நிலையில், சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan