வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் ஐந்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு
மதுருப்பிட்டிய மாஓய பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன நபர், ஐந்து நாட்களின் பின்னர் இன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லோலுவாகொட பிரதேசத்தைச் சேர்ந்த விசு ஏ.அமரசிங்க (வயது 60) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அவர் கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில், மீரிகமவிலிருந்து அலவ்வதல்வத்த பிரதேசத்துக்கு செல்லும் போது பாலத்தைக் கடக்க முற்பட்டுள்ளார்.
பாலத்துக்கு மேல் ஓர் அடிக்கு வெள்ளம் வழிந்தோடிய நிலையில் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கடந்த 18ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலத்தைத் தேடும் பணியில் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வந்த நிலையிலேயே, சடலமானது மிகவும் உக்கிய நிலையில் கிரிஉல்ல பாலத்துக்கு அருகிலிருந்து புதரிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam