இடித்து தள்ளப்பட்ட விஷ்ணு சிலை.. தீவிரமடையும் எல்லை பிரச்சினை
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன.
இதற்கிடையில், கம்போடியாவின் பிரேவ் விஹார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை, தாய்லாந்து அகற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கம்போடியாவுடன் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து இராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியுள்ளனர்.
வெளியான தீர்ப்பு
கடந்த, 2013இல் தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் குறித்த இடத்தில் கம்போடிய இராணுவம், 29 அடி உயரத்தில் சிலையை நிறுவியது. இரு நாடுகளும் புத்த மதத்தை பின்பற்றிலும் புத்தரின் அவதாரமாக இந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர்.

இது தொடர்பான வழக்கில், 1962இல் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம் இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்துள்ளது.
எவ்வாறு இப்பினும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்து வரும் நிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து அகற்றியுள்ளது.
இதன் காரணமாக பதற்றம் அதிகரிக்கவே, இரு நாடுகளுக்கும் இடையில் போரை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரித்த வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam