பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட 'பாலஸ்தீன ஆக்சன்' (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர்களில் நால்வர், தங்களது உடல்நிலை மோசமடைந்துள்ள போதிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கம்ரான் அகமது, ஹெபா முரைசி, தெயுடா ஹோக்ஷா மற்றும் லூயி சியாரமெல்லோ ஆகிய இந்த நால்வரும், தங்களுக்கு உடனடி பிணை வழங்கப்பட வேண்டும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் தமது அமைப்பின் மீதான பயங்கரவாதத் தடையை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இவர்களில் கம்ரான் அகமது உடல்நிலை மோசமடைந்ததால் ஏற்கனவே மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோசமாகும் உடல்நிலை
நீரிழிவு நோயாளியான சியாரமெல்லோ, ஒருநாள் விட்டு ஒருநாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்குக் கடுமையான மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 48 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கெசர் ஜுஹ்ரா மற்றும் அமு கிப் ஆகிய இருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாகத் தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர். சிறை அதிகாரிகள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி வழங்கவில்லை என்று அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காசா போரில் இஸ்ரேலுக்கு பிரித்தானிய அரசு துணை போவதாகக் குற்றம் சாட்டி வரும் இந்த ஆர்வலர்கள், இஸ்ரேலிய ஆயுதத் தொழிற்சாலைகளை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸாரா சுல்தானா குரல் கொடுத்துள்ளதுடன், ஆர்வலர்களின் சட்டத்தரணி சிறை நிலைமைகள் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam