நண்பர்களுடன் குளிக்கச்சென்று காணாமல்போன மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு (PHOTOS)
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகவத்தை கடலில் நேற்று குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் பாடசாலை வீதியை சேர்ந்த எஸ்.அக்சயன் (வயது 16) என்ற மாணவனின் சடலம் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை (14.01.2020) எட்டு மாணவ நண்பர்கள் குளிக்கச் சென்றதில் அவர்களில் மூவரை கடல் அலை அடித்துச் சென்ற சமயம் ஒருவர் தத்தளித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு மாணவர்கள் காணாமல்போயிருந்த நிலையில்,ஒருவரது சடலம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்தோடு கிரான் பிரதான வீதியை சேர்ந்த ஜீ.சிவானந்தன் (வயது 16) என்பவரது சடலம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது உயிர் தப்பியுள்ள மாணவரொருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மற்றவரது உடலை தேடும் பணியில் கடல் உயிர் பாதுகாப்பு படையினர், கல்குடா சுழியோடிகள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் கிரான் பிரதேச மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன்,இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
