திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
திருகோணமலை - மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இளைஞரொருவரின் சடலம் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹதிவுல்வெவ - கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இருந்த போதிலும் குறித்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தில் ஏற்பட்டபிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் வழமைபோன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என குளத்துக்கு சென்று தேடியபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
சடலத்தை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க
உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
