லண்டனிலிருந்து இலங்கை வந்த இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு (PHOTOS)
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலமொன்று இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணை
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கபட்டுள்ளார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
