வீதியோரத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு (Photos)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகில், நாகசேனை - வலஹா தோட்டத்திற்கு செல்லும் வீதியோரத்திலிருந்து இன்று சிசுவின் சடலமொன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம்
குறித்த பகுதியின் ஊடாக சென்ற சிலர் சிசுவின் சடலத்தை அவதானித்து இது தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசு
குறித்த சிசு யாருடையது என்பது இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





