யாழில் இரு குடும்ப பெண்கள் உயிரிழப்பு (Photos)
யாழ்ப்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்களே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இருவேறு விபத்துக்கள்
யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
