போதைப்பொருள் வலையமைப்பில் முக்கியஸ்தர்கள் பலருக்கான தொடர்பு..! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பரவலான போதைப்பொருள் வலையமைப்பில் பாதுகாப்புப் படையினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டு வருவதால் யாரும் பீதி அடைய வேண்டாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்புடனான தொடர்பு
அரசியல்வாதிகள் போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருந்த தொடர்புகளை அறிவிக்குமாறு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கோரியபோது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்ட பின்னர், அவரது வெளிப்பாடுகள் மூலம் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
நம்பிக்கையுடன் காத்திருங்கள்
மேலும் அந்தத் தகவல்களுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.
இதற்கான அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



