இலங்கைக்கு கடத்த இருந்த அரிய வகை கடலட்டைகள் மீட்பு

India Police Sri Lanka International maritime border
By Ashik Oct 20, 2021 12:56 PM GMT
Report

இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் கடல் அட்டைகள் பொலஸ் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது, இதனை தடுப்பதற்கு இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் பொலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று (19) தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாட்டு படகில் வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராமேஸ்வரம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ் (Kanagaraja) தலைமையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்தபோது அதில் சுமார் 200 கிலோ கிராம் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந் தமை தெரிய வந்த நிலையில் கடல் அட்டையும், நாட்டு படகையும் பரி முதல் செய்து அதில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று (19) மாலை சுந்தரம் உடையான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகில் கடலட்டைகள் இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக நடுக்கடலில் சோதனை செய்ததில் சுமார் 500 கிலோ கிராம் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக கடல் அட்டை மற்றும் நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர காவல்படை வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த மூவர் கடலில் குதித்து மாயமாகினர்.

இதை தொடர்ந்து இன்று (20) ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக கடலட்டைகளை பிடித்து காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் உயிருடன் கடல் அட்டையையும், அதனை வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்த மெரைன் பொலிஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US