கிளிநொச்சியில் ஆணின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்பு (Photo)
புதிய இணைப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் எமது செய்தி பிரிவு வினவிய போது, குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அப்பகுதி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.