தலையில் வெட்டுக்காயங்களுடன் வீட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
தலையில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குருநாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோன்வௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மடங்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தவர் என்று பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த ஆணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.