பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா மீட்பு
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை - பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையிலான சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்த 1200 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை

மேலும் சந்தேகநபர், மருதமுனை வி.சி வீதியை சேர்ந்த 43 வயதானவர் என்றும் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam