வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை
காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி.லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனை
நேற்றிரவு (12.07.2023) 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த இளைஞர், இன்று காலை 6 மணியளவில் வீட்டுக்கு 200 மீற்றர் தொலைவில் வெற்றுக்காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
