புர்ஜ் கலீஃபாவின் கோபுரத்தை தாக்கிய மின்னல்.. வைரலாகும் காணொளி
ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து கனமழையை எதிர்நோக்கி வரும் நிலையில், புர்ஜ் கலீஃபாவின் கோபுரத்தில் மின்னல் தாக்கும் காணொளி வைரலாகி, பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.
இந்த காணொளியை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடுமையான மழை
உலகின் மிக உயரமான கட்டிடமான இருண்ட புர்ஜ் கலீஃபாவின் கோபுரம், மேகங்கள் நிறைந்த வானத்தில் மின்னல் தாக்கும் காட்சியையும், அதனுடன் கனமழை மற்றும் இடி சத்தத்தையும் எதிர்நோக்குவது குறித்த காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dubai Crown Prince Sheikh Hamdan bin Mohammed shared a breathtaking video showing lightning striking the top of the Burj Khalifa during a fierce storm.#BurjKhalifa #dubairain #SheikhHamdan #LightningStrikes #ViralVideo #storm pic.twitter.com/FXALAx9ov8
— The Daily Jagran (@TheDailyJagran) December 19, 2025
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல பகுதிகளில் கடுமையான மழை, பலத்த காற்று மற்றும் மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளதால் இந்த வியத்தகு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செங்கடலில் இருந்து மேற்பரப்பு குறைந்த அழுத்த அமைப்பின் நீட்டிப்பு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிலையற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan