ஐரோப்பிய ஒன்றியம் பகல் கொள்ளையடிக்க முயல்கிறது: புடின்
கடும் குற்றச்சாட்டு ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை "பகல் கொள்ளையடிக்க" முயல்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையாக குற்றம்சாட்டினார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்ரைனுக்கு கடன் வழங்க ரஷ்ய சொத்துக்களை பிணையாக பயன்படுத்தும் திட்டத்தை கைவிட்டதை சுட்டிக்காட்டினார்.

ஆனால், ரஷ்யா போர் இழப்பீடு செலுத்தாவிட்டால் அந்த சொத்துக்களை பயன்படுத்தி கடனை திருப்பிச் செலுத்த உரிமை கொண்டாடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
"இது திருட்டு அல்ல... இது பகல் பொழுதில் நடக்கும் கொள்ளை. இந்த கொள்ளையை ஏன் செய்ய முடியவில்லை? ஏனெனில் கொள்ளையர்களுக்கு கடும் விளைவுகள் ஏற்படும் எனத் தெரியும்" என புடின் காட்டமாக தெரிவித்தார்.
இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை சேதப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்வதாக பாராட்டிய புடின், "ட்ரம்ப் முழு உண்மையுடன் செயல்படுகிறார்" எனக் கூறினார்.
ஆனால், அடுத்த அமைதி நகர்வு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவிடமிருந்து வர வேண்டும் என வலியுறுத்தினார்.
"பந்து முற்றிலும் மேற்கத்திய எதிரிகளிடம் உள்ளது, குறிப்பாக கீவ் ஆட்சியாளர்களிடமும், அவர்களின் ஐரோப்பிய ஆதரவாளர்களிடமும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் அமைதித் தீர்வுக்கும் தயார்" என புடின் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் நிபந்தனைகள் 2024 ஜூன் உரையில் கூறப்பட்டவையே என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
உக்ரைன் நேட்டோவில் சேரும் லட்சியத்தை கைவிட வேண்டும், ரஷ்யா உரிமை கொண்டாடும் நான்கு பிராந்தியங்களிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் "சட்டவிரோத தலைவர்" என விமர்சித்தார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan