தனது பட்டத்தை இழந்த 2025ஆம் ஆண்டு மிஸ் பின்லாந்து
ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில், 2025ஆம் ஆண்டிற்கான 'ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில், 2025-ஆம் ஆண்டிற்கான 'மிஸ் பின்லாந்து' (Miss Finland) சாரா ஜாஃப்சே (Sarah Dzafce) தனது பட்டத்தை இழந்துள்ளார்.
இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, "ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்" (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
"இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர். அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில்:"இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை." "அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்."
"இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, "ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்" (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
மிஸ் பின்லாந்து அமைப்பு சாரா
இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

"இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.
அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதில்:"இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை." "அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்." "இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan