கனடா - பாகிஸ்தானுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதா..! வெளியான முக்கிய தகவல்
பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு இனி நேரடி விமான சேவை கிடையாது என வெளியாகி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு சென்ற பாகிஸ்தான் விமானம் ஒன்றின் பணியாளர்கள் அனைவரும் மாயமாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த செய்தியில், பணியாளர்கள் அனைவரும் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கனடா சென்ற விமானம் ஒன்று கனடாவின் ரொரன்றோ Pearson சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் மாயமானதாகவும் தெரிவிக்கும் செய்தியே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது.
பயணிகள் மாயமா..
மேலும், அந்த விமானத்தின் விமானிகள் உட்பட அனைத்து விமானப் பணியாளர்களும் கனடா அதிகாரிகளிடம் சரணடைந்ததாகவும், கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி கனடா சென்ற பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தானுக்கு திருப்பிக் கொண்டு வருவதற்காக புதிதாக விமானிகள் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு இனி நேரடி விமான சேவை கிடையாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் விமானப் பணியாளர்கள் குறித்த இந்த செய்தியை உறுதி செய்ய இயலவில்லை என கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானுக்கும் கனடாவுக்குமிடையில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன விமானம் ஒன்று, வாரத்துக்கு ஒருமுறை இயங்குவதை, Pearson சர்வதேச விமான நிலைய இணையதளமும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.