நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்பு
வட்டவளை, லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா மற்றும் புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் நேற்று மாலை ஐந்து பேர் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது, இதில் இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது சின்னையா ராஜா என்ற நபர் நீரில் மூழ்கிய போது, சஜிந்த டில்சான் என்ற இளைஞர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே அவர்களது சடலங்களை இன்றைய தினம் இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து மீட்டுள்ளனர்.
இவர்கள் கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri