தமிழர் பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு நகர் பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு லோயிட் அவ்னியு (lloyeds avenue) வீதியின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு மட்டக்களப்பு பொலிஸார் வருகை தந்து சடலம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் அடையாளம் காணும்வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணை

இவ்வாறு உயிரிழந்த நிலையில் இருந்த ஆண் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேகத்திற்கிடமக சில பொருட்கள் மற்றும் இரத்த காயங்கள் உடலில் உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam