தலைமன்னார் கடற்பரப்பில் சிதைவடைந்த நிலையில் சடலமொன்று மீட்பு
தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 ஆவது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
தலைமன்னார் பொலிஸார் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலத்தை தலைமன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
