பாழடைந்த கிணற்றில் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மீட்பு
பாழடைந்த கிணற்றில் இருந்து இரண்டு வெளிநாட்டுத் துப்பாக்கிகள் உள்ளடங்களாக மூன்று கைத்துப்பாக்கிகள் இன்று (11) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான இடம் ஒன்றில் உள்ள சுமார் 45 அடி ஆழமான கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பை ஒன்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அந்தப் பையினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர் வகை கைத்துப்பாகி ஒன்று, அந்தத் துப்பாக்கிகளுக்கான 153 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிகள் பாதுகாப்பாகப் பல பொலித்தீன் கைபகளினுள் இட்டே மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், துப்பாக்கிகளை மறைத்து வைத்த சந்தேகநபர் தொடர்பில் கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
