பிரான்சில் திடீரென்று மூடப்பட்ட பாடசாலைகள்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், பிரான்சின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களுக்கு மிக தீவிரமான 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு பிரான்சில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டியுள்ளதுடன், போர்டோ நகரில் 42°C வரை வெப்பம் பதிவாகக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையமான மெட்டியோ-பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
கடுமையான வெப்ப அலை
இந்த அதீத வெப்பம் காரணமாக நாடு முழுவதும் 845 பாடசாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன; மேலும் 1,800 பாடசாலைகளில் வகுப்புகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளன.

எனினும், பாக் இறுதி பரீட்சை எழுதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் வாய்மொழி பரீட்சை திட்டமிட்டபடி நடத்தப்பட்டு வருகின்றன.
சகாரா பாலைவனத்தில் இருந்து வடக்கு நோக்கி நகரும் வெப்பக் காற்று, ஐரோப்பாவின் வளிமண்டலத்தில் தங்கியுள்ளதே இந்த நீண்டகால வெப்ப அலைக்குக் காரணமாகும்.
வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த வார இறுதியில் பிரான்சில் மட்டும் முதியவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், குளிரூட்டிக்கொள்ள மக்கள் ஏரிகள் மற்றும் ஆறுகளில் குதித்ததால் ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதால், பாதுகாப்பற்ற நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
பாடசாலைகள் மூடல்
இதற்கிடையில், பிரான்சின் புகழ்பெற்ற 'ஃபெட் டி லா மியூசிக்' வீதி இசை திருவிழாவின் போது, அவசர கால மருத்துவச் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் பொது இடங்களில் மதுபானம் அருந்த பிரெஞ்சு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் மட்டுமின்றி பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் லுக்சம்பர்க் ஆகிய நாடுகளிலும் இந்த வாரம் வெப்ப நிலை புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கேயும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 39°C வெப்பநிலையும், இத்தாலியின் ரோம் நகரில் 37°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இந்த அதீத வெப்பம் காரணமாகப் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் தொடருந்து தண்டவாளங்கள் மற்றும் எஞ்சின்களின் பாதுகாப்பைக் கருதி பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan