கிளிநொச்சியில் சேதமடைந்த பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவு
கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா பேரிடர் காரணமாக கடந்த 28.11.2025 அன்றைய தினம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலமானது பாதிப்படைந்திருந்தது.
புனரமைக்கும் பணி
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பாலத்தின் புனரமைப்புக்காக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்றைய தினம் பாலத்தின் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
இதன்போது, இன்றைய தினம் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, குறித்த பாலத்தின் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் குறித்த பாலம் எதிர்வரும் 21 அல்லது 22 திகதிகளிள் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளது.

