கிளிநொச்சியில் வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்பொழுது பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குன்று குழியுமாக இருந்த வீதிகள், காபெட் வீதிகளாக புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கோரக்கண்கட்டு பகுதியில் பல வருடங்களாக வீதி புனரமைக்கப்படாமல் குன்று குழியுமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் பாதை இருந்தமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள், விவசாயிகள் என இவ்வீதி ஊடாக பயணிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் வீதி புனரமைப்பு தருமாறு பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புனரமைப்பு பணிகள் நிறைவு
தற்போது இந்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் தலையீட்டின் வீதிகள் புணரமைக்கப்பட்டு,மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியானது, 1.5 கிலோமீட்டர் தூரம்வரை காபெட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 மில்லியன் ரூபாய் செலவு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதியை புணரமைத்து தந்தது போன்று எமது பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு உதவி நலத்திட்டங்களையும் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri