17 பில்லியன் டொலர்களைக் கடந்து சாதனை படைத்த இலங்கையின் ஏற்றுமதி வருமானம்
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2024இல் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும் என்று இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சி
அதன்படி, இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025ஆம் ஆண்டில் அதன் நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்தது, குறிப்பிடத்தக்க ஆண்டுக்கு ஆண்டு 5.6வீத வளர்ச்சியைப் பதிவு செய்ததாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை(EDB) குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 2025இல், பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,490.49 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது, இது 3.95வீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகையானது இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam