நல்லூர் இராசதானியின் தோரண வாசல் புனருத்தாரணத்தின் ஆரம்ப நிகழ்வு
நல்லூர் இராசதானியின் தோரண வாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் ப. புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்களின் பின்னர் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புராதன சின்னங்களில் ஒன்று இன்றைய தினம் பாதுகாத்து பேணப்படுவதற்காக புனரமைப்பு செய்வதற்காக ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட யமுனா ஏரி, மந்திரிமனை போன்ற பகுதிகளும் விரைவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு எமது தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இந்த வேலைத் திட்டங்களுக்கு தொல்பொருள் திணைக்களம் தன்னுடைய பூரண ஒத்துழைப்பினை வழங்கி உள்ளது எனவே எதிர்வரும் நாட்களில் யாழ் மாநகர சபைக்குட்பட்ட அனைத்து புராதன சின்னங்கள் அனைத்தும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.









