யுத்தத்திற்கு பின்னரான நிலைமாறுகால நீதி - ஏழு சிவில் அமைப்புக்கள் கூட்டாக குற்றச்சாட்டு
யுத்தத்திற்கு பின்னரான நிலைமாறுகால நீதியைப் பெற்றுத்தருவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் இயலாமல் போனதாக சிவில் அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இலங்கை அரசாங்கமானது உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் போர்வையில் உள்ளகப்பொறிமுறையாக புதியதொரு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை பரிந்துரை செய்துள்ளது.
இது எவ்வகையிலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோரிக்கைகளோடு ஒத்துப்போகவில்லை என்பதுடன் ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்ட அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்யவில்லை.
நிராகரிப்பு
கடந்தகால அனுபவங்கள் மற்றும் உள்ளாப் பொறிமுறைகளில் நம்பிக்கையின்மை என்பவற்றின் பின்னணியில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நாம் பின்வரும் காரணங்களுக்காக நிராகரிக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட உயிர்பிழைத்த தமிழ்ச்சமூகமானது அட்டூழியக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணை மற்றும் வழக்குத்தொடுதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக நிலைமாறுகால நீதியில் நான்கு முக்கிய அம்சங்களை அடையும் பொருட்டு முழுமையானதான சர்வதேசப் பொறிமுறையைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றது.
உயிர்பிழைத்த தமிழ் சமூகத்தினது பங்குபற்றல் அரிதாகவுள்ளதுடன், அரசாங்கம் தொடர்புகொண்டதாகக் கூறும் சிவில் சமூகத்தின் பெருபகுதியை அவர்களின் பிரதிநிதிகளாகக் கருத முடியாது.
தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நிறுவப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களாவது ஒடுக்கியோரின் கைகளிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களின் கைகளுக்கு அதிகாரம் மாறியதன் விளைவேயாகும். தமிழ்ச்சமூகம் செறிந்திருக்கும் வடக்கு-கிழக்குப் பகுதிகள் இன்றும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.
இனவாதம்
அரசியலில் சிங்கள பௌத்தப் பேரினவாதம் ஆதிக்கம் செலுத்துகின்றது. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளிலூடாக, இறுதியுத்தத்தினை முடிவுக்குக்கொணர்ந்த இராணுவத்தை தேசிய வீரர்கள் என இன்றும் போற்றப்பட்டு வருகின்றார்கள்.
சிங்கள் - பௌத்த அரசானது பாதிக்கப்பட்ட உயிர்பிழைத்த தமிழ்ச்சமூகத்துடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தால் கடந்த காலத்தில் நிறுவப்பட்ட பரணகம ஆணைக்குழு உடகம ஆணைக்குழு. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைப் பணிக்குழு, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அத்துடன் இழப்பீட்டுக்கான பணியகம் உள்ளடங்கலான ஆணைக்குழுக்கள் படுதோல்வியடைந்துள்ளது .
பாதிக்கப்பட்ட, உயிர்பிழைத்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இலங்கை அரசின் மீதிருந்த சிறிதளவான நம்பிக்கையையும், உறுதியையும் தொலைந்தெறிந்துவிட்டது.
இலங்கை அரசாங்கங்கமானது இத்தகைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலிற்காக நீதிமன்றப் பொறிமுறைகளை நிறுவவேண்டும் என பெருந்துறைகளை உள்ளடக்கிய அறிக்கையினை ஏழு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
