பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை.
அதனை புதுப்பிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முற்பட்டாலும், பெருந்தோட்டக் கம்பனிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடனேயே தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
எனவே, தற்போதைய வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கமைய, சம்பள உயர்வுக்கான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளது.


வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
