இந்து மதத்திற்கு எதிரான அண்மைக்கால நடவடிக்கைகள் வேதனைக்குரியது: சர்வதேச இந்து இளைஞர் பேரவை

Jaffna Batticaloa People Temple
By Independent Writer Jan 03, 2022 03:59 PM GMT
Report

மிக அண்மைக்காலமாக இந்துமதம் சார்ந்த விக்கிரகங்கள் மற்றும் சிலைகள் களவாடப்படுவதும் சேதமாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது எனச் சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பிரதமகுருவுமாகிய சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மிக அண்மைக் காலமாக இந்துக் கடவுள் விக்கிரகங்கள் களவாடப்படுவதும் அவை கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. அத்தோடு ஓர் மதத்திற்கு எதிரான வன்மப் போக்கு ஏனையோரிடத்தே அதிகரித்திருக்கின்றது என்றால் அவர்கள் பண்படுத்தப்பட வேண்டியவர்கள், அடையாளம் காணப்பட வேண்டியவர்கள்.

எனவே அண்மையில் யாழில் களவு போன விக்கிரகங்கள் கடத்தப்பட்டு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அத்தோடு அவற்றைக் கடத்துபவர்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியது.

ஆனால் தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் இரு கிழமைகளில் கும்பாபிஷேகம் காண இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது இந்து மக்கள் மத்தியில் வேதனைக்குரிய செயலாக இருக்கிறது.

இந்துக்கள் யாருமே ஏனைய மதத்தினர்களுக்கு எதிராக மதப்பரம்பல்களையோ அல்லது இவ்வாறு சிலைகளை உடைக்கின்ற செயல்களையோ செய்வதில்லை. அந்நியப் படையெடுப்பு காலம் முதல் இற்றைவரை பல நூறு ஆலயங்களும் ஆலயச் சொத்துக்களும் அழிக்கப்படும் சூறையாடப்பெற்றும் வந்துள்ளது.

தற்காலத்து மதநல்லிணக்க குழுக்கள், அமைப்புகள் என்னும் பெயரில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஓர் மதவழிபாடு சார்ந்தவைகள் கொச்சைப்படுத்தப்படுத்தப்படும் போது அல்லது ஆக்கிரமிப்பு அழிப்புக்குள்ளாகும் போது இவ்வமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன.

பேரளவில் இருப்பதற்கு இவை இல்லாமல் இருப்பது சிறப்பு ஜனாதிபதியின் சமய விவகாரங்கங்களிற்குரிய பொறுப்பானவர்கள் ஏனக் கூறிக்கொள்வோரும் படத்திற்கும் பகடை வாழ்த்துகளுக்கும் செலவழிக்கும் நேரத்தை இவ்வாறான அராஜகங்கள் இடம்பெறுகின்றபோது ஏன் தலையினை உள்ளே இழுத்துக்கொள்கின்றனர் என்று தெரியவில்லை.

அவரவர்களுக்கு அவரவர் சமயம் சார் நம்பிக்கைகளைச் சிதைக்க முற்படும் போது சமயங்களிற்கான முரண்பாடுகள் தோன்றும் அதனைத் தடுக்க வேண்டுமானால் சமயம் சார் அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

தட்டிக் கேட்க வேண்டியவர்கள் கண்மூடிக்கொண்டு இருப்பதால் ஏந்தப் பலனும் இல்லை எனவே உடனடியாக இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் அதற்காக சமயம் சார்ந்தோர் நல்ல வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.

மனமாற்றம் வரும் வரைக்கும் எத்தனை மதங்கள் மாறியும் பலன் இல்லை. எனவே மற்றவர்கள் மனங்களைப் பயன்படுத்தாது வாழுங்கள் என கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US