ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கான தெரிவில் ரெபெக்கா கிரின்ஸ்பான் முன்னிலை
ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளருக்கான தெரிவில், கொஸ்டாரிக்காவைச் சேர்ந்த தூதரக அதிகாரி ரெபெக்கா கிரின்ஸ்பான் முன்னணியில் உள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், . வரலாற்றில் முதல் பெண் பொதுச் செயலாளராகவும், முதல் யூதப் பொதுச் செயலாளராகவும் பதவியேற்பார் கிரின்ஸ்பான் தற்போது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான UNCTAD-இன் பொதுச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
1994–1998 காலப்பகுதியில் கொஸ்டா ரிக்காவின் இரண்டாவது துணை ஜனாதிபதியாக, அவர் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
2022ஆம் ஆண்டின் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் உக்ரைனிலிருந்து 32 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான, அமெரிக்க, ரஷ்யா,சீனா, பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய ஒவ்வொரு நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது.
இவற்றில் ஏதேனும் ஒரு நாடு எதிர்த்தாலும் அவரது தெரிவு தடைப்படலாம். இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய நாடுகள் அமைப்பில் மாற்றங்களையும் மறுசீரமைப்பையும் வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
எனவே, ஐக்கிய நாடுகள் . அமைப்பைச் சீர்திருத்துவதற்கான தனது திட்டங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளுடன் பொருந்துகின்றன என்பதை கிரின்ஸ்பான் நிரூபிக்க வேண்டியுள்ளது.

அதேவேளை, காஸா விவகாரம், ரஷ்யா–உக்ரைன் போர், அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் சீர்திருத்தம் ஆகியவை அவரது தெரிவைச் சுற்றியுள்ள முக்கியமான சர்வதேச இராஜதந்திர விவகாரங்களாக உள்ளன.