டாக்டர் ஷாபியின் தீர்ப்பு அரசியல் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த கௌரவம் - அப்துல் மஜீத்
டாக்டர் ஷாபி நிரபராதி என்ற தீர்ப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அரசியல் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் (Mubarak Abdul Majeed) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகம் ஒன்று எந்த ஆதாரமும் இன்றி சொன்ன குற்றச்சாட்டுக்காக அன்றைய ரணில், சஜித் அரசு டாக்டர் ஷாபியை கைது செய்து ஜனநாயகத்தையும் மானுட நீதியையும் புதைத்தது.
இந்த அநீதிக்கெதிராக போராட முடியாதவர்களாக, டாக்டருக்கு நீதி பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக அன்று ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரசின் அமைச்சர்கள் வெறும் காய்களாக இருந்தனர்.
கொடுமைமிக்க கடந்த நல்லாட்சியால் அநியாயமாக கைது செய்யப்பட்ட ஷாபிக்கு ராஜபக்ஷ ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று நம்பி இந்த ஆட்சியை நாம் கொண்டு வந்தோம். அதன் பலன் இப்போது கிடைத்துள்ளது.
முஸ்லிம்கள் இந்த அரசுக்கு எதிராக 95 வீதம் வாக்களித்தும் கூட டாக்டர் ஷாபியின் பிரச்சினைக்கு யாரினதும் அழுத்தம் இன்றி நீதி மன்றம் மிகச்சரியான தீர்ப்பை வழங்கியுள்ளமை ராஜபக்ஷ ஆட்சியின் சிறந்த ஆட்சிக்கு உதாரணமாகும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
