பேசிய விதம் பிடிக்காததால்... சுவிட்சர்லாந்து மீதான கூடுதல் வரிக்கு ட்ரம்ப் கூறிய காரணம்
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளமைக்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளார்.
கூடுதல் வரி விதிப்பு
முதலில் 30 சதவீதமே வரி விதித்ததாகவும், ஆனால் கூடுதலாக 9 சதவீதம் வரிவிதிக்க ஒரு காரணம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், சுவிட்சர்லாந்து மீதான 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது முதலில் சுவிஸ் பிரதமர் என்று நினத்தேன்.
Trump: "So I put on a 30% tariff, which is very low. I got an emergency call from I believe the prime minister of Switzerland. She was very aggressive ... I didn't really like the way she talked to us, so instead of giving her a reduction, I raised it to 39%." pic.twitter.com/covIESz4u2
— Aaron Rupar (@atrupar) February 10, 2026
ஆனால் மறுப்புறம் தொலைப்பேசியில் சுவிஸ் கூட்டாட்சி பேரவையின் உறுப்பினர் கரின் கெல்லர் பேசினார்.
பேசிய விதம்
அவர் வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.

நீங்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எங்களுடன் வர்த்தகத்தில் உங்களுக்கு 42 பில்லியன் டொலர் வருவாய் உள்ளது நான் விளக்கினேன்.
இருப்பினும், 'நாங்கள் ஒரு சிறிய நாடு' என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
100 ஆண்டுக்கு பிறகு உருவாகும் திரிகிரக யோகம்: 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது Manithan