அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை - பணம் அனுப்புவதை தவிர்க்கும் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதியை அனுப்புவதைத் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் அனுப்பும் பணத்தை அரசாங்கம் திருடிவிடும் என்பதால் பணம் தேவைப்படுபவர்களின் கைகளில் ஒருபோதும் சேராது என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
நெருக்கடியை தொற்றுநோய்க்கு அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது, எனினும், பொருளாதார வல்லுநர்கள் தவறான நிதி கையாளுகை காரணமாகவே நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை மிகவும் மோசமாகிவிட்டது, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே தற்போது எரிபொருளை நிரப்ப அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் உணவு குறைவாக வழங்கப்படுவதால் பஞ்சம் ஏற்படும் என்ற அச்சம் அதிகரிக்கிறது.
தற்போது எங்களால் உதவ முடியாது
49 வயதான உபுல் சந்தன, வடக்கு விக்டோரியா இலங்கை நலன்புரி மற்றும் கலாச்சார சங்கத்தின் செயலாளராக உள்ளார். இலங்கை சமூகம் சக்தியற்றதாக உணர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களால் உதவ முடியாது. நீங்கள் காலையில் முகப்புத்தகத்தை பார்த்தால், இலங்கையில் உள்ள சில நண்பர்களிடமிருந்து உதவி கேட்டு உங்களுக்கு செய்திகள் வரும்,” என்று சந்தன கூறினார்.
விடயம் என்னவென்றால், நாட்டிற்கு டொலர்கள் தேவை, ஆனால் ஏமாற்றம் காரணமாக, சில இலங்கை-அவுஸ்திரேலியர்கள் பணம் அனுப்ப விரும்பவில்லை. நாங்கள் டொலர்களை அனுப்பினால், அதை அரசாங்கமே எடுக்கும். மாறாக சமூகத்திற்கு உதவப் போவதில்லை.
முறையாக வழிகளில் பணம் அனுப்ப வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை, அதைச் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
நாட்டிற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அவுஸ்திரேலியர்கள் பணம் அனுப்புவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். எவ்வாறாயினும், மருத்துவ பொருட்கள் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று அவர் பரிந்துரைத்தார்.
இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை வழங்கிய அவுஸ்திரேலியா
பணம் ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். மருந்துகள் அல்லது மருத்துவ உபகரணங்களை அனுப்புவது உதவியாக இருக்கும். மருத்துவத்துடன் தொடர்புடைய எதுவும் நல்லது, எனினும் அவுஸ்திரேலியர்களிடம் நாங்கள் அதிகம் கேட்க முடியாது,
ஏனெனில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்களை உறுதியளித்துள்ளது. இதேவேளை, தமது அன்புக்குரியவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் பாதுகாப்பு இல்லை என இலங்கை சமூகத்தின் மற்ற உறுப்பினர்களும் கவலை தெரிவித்தனர்.
அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவவையும் அவரது அரசாங்கத்தையும் ஊழல்வாதிகள் என்று வர்ணிக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய கிரிக்கெட் தொடர் அவர்களின் நாட்டின் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ஸ்தாபிக்கப்பட்டது என்றும் சந்தன மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
