தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி! சக மாணவர்களால் சிக்கிய கல்லூரி ஆசிரியர்கள்!
வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.
கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி குமாரி என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தமைக்கான காரணம்
தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணத்தை அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர்.
கல்லூரி ஆசிரியர்களால் குறித்த மாணவி அனுபவித்த துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் இவ்வாறு அவர் தவறான முடிவெடுத்ததாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது போன்ற மரணங்கள் இனியும் இடம்பெறுவதை தடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சினைக்கு தீர்வு
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பீடத்தின், பீடாதிபதி வர வேண்டும் என்று கோரி, இரவு வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சஞ்சீவனி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்விக் கல்லூரிக்கு வந்துள்ளார்.
ஆனால் தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள், அவர் இவ்வாறு தவறான முடிவை நோக்கிச் சென்றுள்ளார்.
இதேவேளை, அவர் யாருக்கும் தெரியாத வகையில் விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
