ரஷ்யாவை ஊக்குவிக்கும் அமெரிக்கா..! ஜெலென்ஸ்கி காட்டம்
அமெரிக்கா மௌனமாக இருப்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மேலும் ஊக்குவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட கொடூர ஏவுகணைத் தாக்குதலை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் 13 பிராந்தியங்களின் 22 இடங்களில் நடந்த இந்தத் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் உட்கட்டமைப்புக்கு சேதம்
உக்ரைன், இதனை ஒரு பொதுமக்கள் படுகொலை என்று கூறும் நிலையில், ரஷ்யா இதை ஒரு வெற்றியாக கருதுகின்றது.
விமான நிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் போன்றவற்றை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறுகின்றது.
எனினும், தாக்குதலால் பொதுமக்கள் உட்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
